பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

, by questionbank2u

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்பிப்ரவரி 21,2014,



ராசிபுரம்: பொறியியல் பட்டதாரிகள் மற்றும் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படிப்பை முடித்து, வேறு கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருப்போர், தங்களுக்கான Apprenticeship Training அல்லது ரெகுலர் பணி வாய்ப்புகளைப் பெற, பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 5ம் தேதி, முத்தயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு வரவேற்கப்படுகிறார்கள்.
இதில் கலந்துகொள்ள வேண்டுமானால், BOAT வெப் போர்டலில், www.boat-srp.com பதிவுசெய்து, அந்த பதிவுஎண்ணை கட்டாயம் கொண்டுவர வேண்டும். அந்த எண் இல்லையெனில் அனுமதி கிடையாது. அனைத்து அசல் சான்தழ்களையும் எடுத்துவர வேண்டும்.
தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப, முந்தி வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அனைத்து இளநிலைப் பட்டதாரிகளும், தங்களின் பள்ளி படிப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டதாரிகள், பள்ளிப் படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்ணும், இளநிலைப் படிப்பில் 60% மதிப்பெண்ணும், முதுநிலைப் படிப்பில் 65% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு www.muthayammalengg.ac.in (or) boatsr-apprentice.tn.nic.in.

0 comments:

Post a Comment