1,400 இளநிலை உதவியாளர்கள் பள்ளிக்கல்வித் துறையில் பணி நியமனம்

, by questionbank2u

1,400 இளநிலை உதவியாளர்கள் பள்ளிக்கல்வித் துறையில் பணி நியமனம்

எழுத்தின் அளவு :
சென்னை: பள்ளிக் கல்வி துறையில் 1,395 இளநிலை உதவியாளர்கள் வரும் 25, 26ம் தேதிகளில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்களில் 1,395 பேர் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நிகழ்ச்சி ஆன்-லைன் வழியில் வரும் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி நடக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் முகவரி அடங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
ஒரு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு 25ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது. சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாதவர்களுக்கும், வெளி மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
தேர்வு பெற்றவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வர வேண்டும். டி.என்.பி.எஸ்சி.யால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு உத்தரவு, கல்வி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
read more

முதல்வர், பயிற்சி ஆசிரியர் இன்றி தள்ளாடும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்

, by questionbank2u

முதல்வர், பயிற்சி ஆசிரியர் இன்றி தள்ளாடும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்

எழுத்தின் அளவு :

திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) தற்போது முதல்வர், பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் திணறி வருகின்றன.
ஆர்வம்
தமிழகத்தில் உயர் கல்விக்கு வாய்ப்பில்லாத மாணவர்கள் தொழிற்கல்வி பயில 72 இடங்களில் ஐ.டி.ஐ.க்களை அரசு துவங்கி, பயிற்சி அளித்து வருகிறது. இங்கு பயிற்சி பெற்றோர் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். எளிதாக வேலை கிடைப்பதால், இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப ஐ.டி.ஐ.க்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் பெரும்பான்மையான ஐ.டி.ஐ.க்கள் முதல்வர் இல்லாமலும், பயிற்சி ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாமலும் திணறி வருகின்றன.
இதுகுறித்து பயிற்சி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள 72 ஐ.டி.ஐ.க்களில் 30 ஐ.டி.ஐ.க்களில் முதல்வர் பணி இடங்கள் காலியாக உள்ளன. ஒரு முதல்வர், இரண்டு கல்லூரிகளை சேர்த்து கவனிக்கும் நிலை உள்ளது. மாணர்வர் சேர்க்கையை இவர்கள் தான் கவனிக்க வேண்டும்.
இதுபோன்று 70க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்குவதில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்க உள்ள நிலையில், காலியாக உள்ள இந்த பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போது தான் ஐ.டி.ஐ.க்கள் திறம்பட செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புலம்பல்
மேலும் பணியிடங்கள் நிரப்பாததால் ஐ.டி.ஐ.க்களில் பணியாற்றுவோர், பதவி உயர்வு இன்றி, ஓய்வு பெறும் நிலை உள்ளதாகவும் அலுவலர்கள் புலம்புகின்றனர்.
பயிற்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணி மூப்பு பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் காலி இடங்கள் நிரப்பப்படும்" என்றார்.
read more

கிடப்பில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகள்: குழப்பத்தில் தேர்வர்கள்

, by questionbank2u


கிடப்பில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகள்: குழப்பத்தில் தேர்வர்கள்

எழுத்தின் அளவு :



Print
Email
பேரையூர்: குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி. அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
2014-15ம் ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலை முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகி அக்.19ல் தேர்வு நடக்கும் என்றும் ஆண்டு திட்டமிடலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூலை 3வது வாரம் கடந்த நிலையிலும் அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரவில்லை.
கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதால் குறைந்தது 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் குரூப் 7 (நிர்வாக அதிகாரி) மற்றும் குரூப் 8 தேர்வுகள் மே மற்றும் ஜூனில் அறிவிக்கப்பட்டு, முறையே ஆக.2, செப்.14ல் தேர்வு நடக்கும் என்றும் ஆண்டு திட்டமிடலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தேர்வுகளுக்குமான முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை. அறிவிப்புகள் வெளியாகி செயல்படுத்த முடியாமல் தவிக்கும் டி.என்.பி.எஸ்.சி.யால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
read more

சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட். படித்தவர்களுக்கு சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு

, by questionbank2u

சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட். படித்தவர்களுக்கு சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு

எழுத்தின் அளவு :


Print
Email
சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன் பி.லிட். படிப்பில் சேர்ந்து படித்தவர்களை சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட். படிப்பும் தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவியர் மூன்று ஆண்டு படிப்பான பி.லிட். முடித்தால் பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோவை மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில் சில ஆண்டுகளுக்கு முன் ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக 2007-08 கல்வியாண்டில் இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு குளறுபடிகளால் கல்வியாண்டுக்கான தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.
இதனால் டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின் ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். படிப்பில் சேர்ந்தனர்.
படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு அதிர்ச்சியே பதிலாக கிடைத்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில் பி.லிட். சேர்ந்திருப்பதால் அந்த பட்டம் செல்லாது என ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால் ஏராளமானோர் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த 2007-08ம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து 2008-09ம் கல்வியாண்டில் படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால் செப்டம்பரில் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.
 படித்த படிப்புக்கான காலம் 2008-09வுடன் முடிவடைந்துவிட்டதால் 2009-10க்கான கல்வியாண்டில் பி.லிட். சேர்த்துக்கொண்டனர். அப்போது பல்கலைக்கழகம் தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
தற்போது இத்தனை ஆண்டு காத்திருப்பில் அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால் தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு எங்கள் வாழ்க்கை பலியாகிறது.
கடந்த ஆண்டில் இதேபோன்று படித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
read more

Selection List of Technical Assistant by Direct Recruitment (2013-14)

, by questionbank2u

read more

Selection List of Assistant Engineer by Direct Recruitment (2013-14)

, by questionbank2u

read more

Selection List of 951 Nos of Assessor Grade II by Direct Recuritment (2013-14)

, by questionbank2u

read more